Ind vs Eng – வலுவான நிலையில் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை

Ind vs Eng – வலுவான நிலையில் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஆமதாபாத் நகரில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

Ind-vs-eng

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்திருந்தது வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்சர் படேல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் இந்நிலையில் இன்று மூன்றாம் நாள்  ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் அக்சர் பட்டேல் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார் இதைத்தொடர்ந்து வந்த இஷாந்த் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் 94 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட 160 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

Leave a Reply

%d bloggers like this: