[ Ind vs Eng ]  இன்று 2-வது டி20 போட்டி !!  சாதிக்குமா இந்திய அணி ?

[ Ind vs Eng ]  இன்று 2-வது டி20 போட்டி !!  சாதிக்குமா இந்திய அணி ?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது

இந்நிலையில் இன்று இரண்டாவது t20 போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது இதற்கான வலைப் பயிற்சியில் இரு அணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது குறிப்பாக அணியின் கேப்டன் விராட் கோலி மீது பலரும் தங்கள் விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.

விமர்சனங்கள்

குறிப்பாக உத்தரகாண்ட் போலீசார் தங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு விழிப்புணர்வு பதிவில் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டும் போதாது விழிப்புணர்வோடு வாகனம் ஓட்ட வேண்டும் இல்லை என்றால் விராட் கோலி மாதிரி டக் அவுட் ஆகிவிடுவீர்கள் என ட்விட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேலும் முன்னாள் வீரர்கள் அஜய் ஜடேஜா, வீரேந்தர் சேவாக், விவிஎஸ் லட்சுமணன் போன்றவர்கள் விராட் கோலி போட்டி தொடங்குவதற்கு முன்  ஆக்ரோசமாக பேட்டியளித்தார் ஆனால் களத்தில் அந்த ஆக்ரோஷம் காணப்படவில்லை எனவும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்தும்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Ind-vs-Eng

Ind vs Eng 

டாஸ் முக்கியம்

இந்த விமர்சனங்களுக்கு இடையே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. அகமதாபாத் மைதானத்தை பொருத்தவரையில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக உள்ளதால் இந்திய அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசையில் எந்தவித மாறுதலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 15 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன இதில் இங்கிலாந்து அணி 8 போட்டிகளிலும் இந்திய அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 Ind Vs Eng T20 2nd match 

Leave a Reply

%d bloggers like this: