[ Ind vs Eng ] ஜோஸ் பட்லர் அதிரடி | 3வது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

ஜோஸ் பட்லர் அதிரடி | 3வது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

Ind vs Eng               |               Star Tamil News


இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்றது  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய  இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் வழக்கம்போல டக் அவுட்டாகி வெளியேறினார்,  ரோகித் சர்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அதன்பின் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார் அவர் 46 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் இந்திய அணியின் மற்ற வீரர்கள் செற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது .

இங்கிலாந்து பேட்டிங்

Ind-vs-eng

157 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அந்த அணியின் ஜோஸ் பட்லர் 52 பந்துகளில்  83 ரன்கள் விளாசினார் இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான  பேர்ஸ்டோ 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் இங்கிலாந்து அணி 18.2 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி தரப்பில் சாகல் மற்றும் W.சுந்தர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர் .

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்   2 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது இத்தொடரின் நான்காவது  போட்டி மார்ச் 18ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது அப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.


Star Tamil News                              Ind Vs Eng

Leave a Reply

%d bloggers like this: