8 நாட்களில் 17000 முறை நிலநடுக்கம் அச்சத்தில் உறைந்த ஐஸ்லாந்து மக்கள்!!

8 நாட்களில் 17000 முறை நிலநடுக்கம் அச்சத்தில் உறைந்த ஐஸ்லாந்து மக்கள்.
Iceland earthquake 

ஐஸ்லாந்து தலைநகரில் கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து 24 மணி நேரமும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும்  இதனால் நாட்டின் தெற்குப் பிராந்தியத்தில் இருக்கும் கெய்லிர்  மலைப்பகுதியில் உள்ள எரிமலை எந்த நேரமும் வெடித்து சிதறலாம் எனவும் அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மலையை சுற்றி உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம்

எரிமலை

பொதுவாக ஐஸ்லாந்து நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது சகஜம் ஆண்டுக்கு 1000 முதல் 1200 முறை இங்கு நிலநடுக்கம் ஏற்படும் ஆனால் கடந்த எட்டு நாட்களில் சுமார் 17 ஆயிரம் முறை அதாவது எட்டு நாட்களாக 24 மணி நேரமும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: