[ Kamala Harris ] ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் !! – 02

[ Kamala Harris ]

ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்திய மக்களுக்கு தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பரவி இருக்கும் இந்திய மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு உலகத் தலைவர்கள் இந்திய மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ் டுவிட்டர் மூலம் ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kamala-Harris

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ” இனிய ஹோலி பண்டிகை ” வாழ்த்துக்கள். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மீது வீசப்படும் வண்ண பொடிகளுக்கு ஹோலி பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது வேறுபாடுகளை புறம்தள்ளி ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது ஹோலி பண்டிகை என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலால் உலகம் எதிர்கொண்டுள்ள கடினமான இந்த சூழலில் ,  இந்த செய்தியை நமக்கு ஹோலி  உணர்த்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.


Star Tamil News  |   Kamala Harris holi wishes

Leave a Reply

%d bloggers like this: