[ Hari Nadar ] 11 கிலோ தங்கம் 5 சொகுசு கார் ஹரி நாடாரின் மாஸ் வேட்புமனுத் தாக்கல் விபரம் !!

Hari Nadar

11 கிலோ தங்கம் 5 சொகுசு கார் ஹரி நாடாரின் மாஸ் வேட்புமனுத் தாக்கல் விபரம்

Star Tamil News

நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என பன்முகதன்மை கொண்ட நடமாடும் நகை கடை ஹரிநாடாரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்கிற அளவுக்கு பிரபலமானவர்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஹரி சென்னை வந்து ரியல் எஸ்டேட் சினிமா பைனான்ஸ் போன்ற துறைகளில் ஈடுபட்டு அதில் செல்வம் கொட்டவே மெல்ல தனது பார்வையை  அரசியல் மீது திருப்பி ராக்கெட் ராஜாவின் பனங்காட்டு படை கட்சியில் இணைந்து கடந்த 2019 ஆம்  ஆண்டு நடைபெற்ற நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரபல கட்சிகளை பின்னுக்கு தள்ளி மூன்றாமிடம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Hari-nadar

இதைத்தொடர்ந்து நடைபெற உள்ள 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பாக ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளார் இதற்கான வேட்புமனுவை நேற்றைய தினம் ஆலங்குளம் வட்டாச்சியரிடம் தாக்கல் செய்தார் வேட்புமனுவில் ஹரி நாடார் குறிப்பிட்ட சொத்து பட்டியல் படி தன்னிடம் டொயோட்டா ஃபார்ச்சூனர், இனோவா, மஹிந்திரா எக்ஸ்யூவி, டாட்டா சபாரி , பொலிரோ உட்பட 12 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் 11.5 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளது எனவும் 4.5 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கம் உள்ளதாகவும் மேலும் தன் மீது 15 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Star Tamil News         |                   Hari Nadar

Leave a Reply

%d bloggers like this: