[ Hari Nadar ] பாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது !!

[ Hari Nadar ]

பாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகள் வாங்கிய ஹரி நாடார் 7.5 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hari-nadar

Also Read : அம்மா மினி கிளீனிக்கை அடித்து நொறுக்கிய திமுகவினர்

 

நடமாடும் நகைக்கடை, தொழிலதிபர், அரசியல்வாதி, சினிமா கதாநாயகன் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஹரி நாடார் இவர் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார் இவர் பிரித்த வாக்குகளால் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வி அடைந்ததோடு அமைச்சராகும் வாய்ப்பையும் இழந்தார்.

நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் ஹரிநாடார் எப்போதும் 11 கிலோ எடை கொண்ட நகைகளை அணிந்திருப்பார். அண்மையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஹரி நாடாரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் நகைக்கான பில் குறித்து கேள்விகள் எழுப்பியதோடு வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருமான வரி பாக்கியை செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாஜக பிரமுகர் ரவீந்திரா என்பவர் ஹரிநாடார் தன்னிடம் 150 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 7.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்போது பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர், அரசியல் பிரமுகர் மற்றும் கதாநாயகனுமாகிய ஹரி நாடாரை கேரள மாநிலம் கோவளத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read : அம்மா மினி கிளீனிக்கை அடித்து நொறுக்கிய திமுகவினர்

Star Tamil News    |  Hari Nadar 

Leave a Reply

%d bloggers like this: