[ Harbhajan Singh ] இரவு நேர ஊரடங்கு – ஹர்பஜன் சிங் கிண்டல் !! -03

[ Harbhajan Singh ]

இரவு நேர ஊரடங்கு – ஹர்பஜன் சிங் கிண்டல்


இந்தியாவில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து நிதி ஆயோக் சுகாதார பிரிவின் உறுப்பினர் வி.கே.பால் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் வேகம் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளது. அடுத்து வரும் 4 வாரங்கள் நமக்கு மிக நெருக்கடியான காலகட்டம் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அரசுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் தெரிவித்தார்.

Harbhajan-singh

                                VK Paul

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இரவு நேர ஊரடங்கு உட்பட பல கட்டுபாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டார். அதன்படி ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் பகல் நேர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து தலைநகர் டில்லியிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில அரசுகளின் இரவு நேர ஊரடங்கு உத்தரவை கிண்டலடிக்கும் வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில் கொரோனா இரவு நேரங்களில் தான் வெளியில் வருமா பகலில் வராதா என பதிவிட்டுள்ளார்.

 


Star Tamil News                                     Harbhajan Singh

Leave a Reply

%d bloggers like this: