மும்பை மின் விநியோகத்தை தடை செய்த சீன ஹேக்கர்கள்!!!-01

மும்பையின் மின் விநியோகத்தை தடை செய்த சீன ஹேக்கர்கள்

மும்பையில் கடந்தாண்டு அக்டோபர் 12ஆம் தேதி மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது ஆரம்பத்தில் இது சாதாரண மின்தடை தான் என மக்கள் மத்தியில் கருதப்பட்டது ஆனால் இந்த மின்தடைக்கு சீனாவின் ஹேக்கர்கள் தான் காரணம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன

சீன-ஹேக்கர்கள்

இந்த மின்தடையால் மும்பையின் மத்திய பகுதியான தாதார் போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன  மின்சார ரயில்களின் சேவை முற்றிலும் முடங்கின பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் தடைபட்டது.

தானியங்கி மின் வினியோக அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டிருக்கும் என நினைத்து இதற்கான காரணத்தை அறிய ஆய்வு செய்தபோதுதான் இது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட மின் தடை அல்ல இது சீன ஹேக்கர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தபட்டுள்ளது என மகாராஷ்டிரா மின் துறை தொழில்நுட்ப குழுவிற்கு தெரியவந்தது.  இது குறித்தான விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்து மகாராஷ்டிரா சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனம் அறிக்கை

தற்போது இதுகுறித்து அமெரிக்கா சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம் உலகளவில் இணையம் மூலம் தானியங்கி மின் வினியோக அமைப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனமாகும்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரெட் எக்கோ  என்னும்  மால்வரை ஹேக்கர்கள் குழு தானியங்கி மின் வினியோக அமைப்பில் ஊடுருவச் செய்து மின்தடையை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் தொழில்நுட்பம் பாதுகாப்பு பலப்படுத்தும் என மும்பை சைபர் கிரைம் அறிவித்துள்ளது

Leave a Reply

%d bloggers like this: