புதிய தொழில்நுட்பம் 50நாள் பயன்படுத்திய சமையல் எரிவாயு சிலிண்டர்-இனி 100 நாள் பயன்படுத்தலாம்!!

வந்தது புதிய தொழில்நுட்பம் 50நாள் பயன்படுத்திய சமையல் எரிவாயு சிலிண்டர் இனி 100 நாள் பயன்படுத்தலாம்

அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையால் நடுத்தர மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றன இதற்கு தீர்வுகானும் வகையில் எரிவாயு பயன்பாட்டை  40% குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கொளகாத்தி ஐ.ஐ.டி குழு கண்டுபிடித்துள்ளது .

IIT-stove

நாம் வழக்கமாக உபயோகபடுத்தும் பழைய பர்னர்களுக்கு பதிலாக புதிய porous radiant burner (PRB) பர்னர்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது இதன் மூலம் 30% விரைவாகவும் 40% குறைவான எரிவாயுவை பயன்படுத்த முடியும் என அக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கொளகாத்தி ஐ.ஐ.டியின் பேராசிரியரும் ஆராய்ச்சி குழுவின் தலைவருமான திரு.முத்துகுமார் தெரிவிக்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பர்னர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை வீட்டு உபயோகத்திற்கும் வனிக ரீதியான பயன்பாட்டுக்கும் ஏற்றவை இந்த பர்னர்களில் எல்.பி.ஜி , பயோ கேஸ் மற்றும் மண்ணெண்ணை போன்ற எரிபொருளை பயன்படுத்த முடியும்  இந்த புதிய தொழில்நுட்பம் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில் பழைய கன்வன்சனல் பர்னர்கள் வெப்ப கடத்தல் குறைபாடுகள் உடையவை இதனால் வெப்ப இழப்பு, அதிக அளவு எரிபொருள் மற்றும் நேரம் விரையமானது. ஆனால் இந்த புதிய PRB பர்னர்கள் வெப்ப இழப்பை கட்டுபடுத்தி பாத்திரங்களுக்கு வெப்பத்தை சீராக கடத்தும் திறன் பெற்றவை எனவே 30% விரைவாக சமையல் செய்ய முடியும் 40% எரிபொருளும் மிச்சமாகும்  இந்த பர்னர்கள் ஆய்வகம் மற்றும் சமையலறைகளில் பரிசோதிக்கபட்டு இந்திய அரசால் BSI தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இந்த புதிய பர்னர்கள் 2022 குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் இதனால் ஏழை நடுத்தர குடும்பங்களின் எரிவாயு செலவுகள் மிச்சபடுத்தபடும் அதே வேளையில் எரிவாய்வுகாக இந்தியா செலவழிக்கும் அன்னிய செலாவணி தொகை பாதியாக குறையும் உலகளவில் இந்த தொழில்நுட்பம் புதிய தாக்கதை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார் .

 

 

Leave a Reply

%d bloggers like this: