அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்வு-முதல்வர் அறிவிப்பு! போட்டி தேர்வு மாணவர்களுக்கு பாதிப்பு?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயர்வு-முதல்வர் அறிவிப்பு! போட்டி தேர்வு மாணவர்களுக்கு பாதிப்பு

சென்னை :-

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60வதாக உயர்த்தி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

கொரானா பெரும் தொற்று காரணமாக அரசின் வருவாய் பெருமளவு பாதிக்கபட்டுள்ளது எனவே அரசின் செலவீனங்களை குறைக்கும் விதமாக பல அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

Chief-minister

Edappadi K Palanisamy

இதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு அடுத்த ஓர் ஆண்டுக்கு அரசின் பணபலன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது தற்காலிகமாக அரசின் செலவுகளை தள்ளிபோடும் விதமாகவே இந்த அறிவிப்பு பார்க்கபடுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்புகளால் புதிதாக அரசு வேலைக்காக அரசு தேர்வை எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்கு போதிய எண்ணிக்கையிலான காலி இடங்கள் கிடைப்பது கடினம்.

Leave a Reply

%d bloggers like this: