[ Glacier Burst ] உத்தரகாண்ட் – பனிச்சரிவில் சிக்கிய 300 பேரை மீட்டது ராணுவம் !!

[ Glacier Burst ]

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கிய 300 பேரை மீட்டது ராணுவம்


உத்தரகாண்ட் மாநிலம் நித்தி பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருந்த Border Road Organization ( பிஆர்ஓ ) தொழிலாளர்கள் 300 பேரை ராணுவம் மீட்டுள்ளது.

Glacier-Burst

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இந்தியா சீனா எல்லை அருகே அமைந்துள்ளது நித்தி பள்ளத்தாக்கு. இங்கு நேற்றைய தினம் பனிச்சரிவு ஏற்பட்டது. விபத்து நடந்த இந்த பகுதியில் பாரதப் மாலா திட்டத்தின் கீழ் ரிஷிகேஷ் முதல் நித்தி பள்ளத்தாக்கு வரை சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியதால் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து மீட்புப் பணியில் ராணுவம் களமிறங்கியது கடும் பனிப்பொழிவு களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் இன்று காலை வரை சுமார் 300 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகாண்ட் முதல்வரிடம் கேட்டறிந்தார் மேலும் தேவையான உதவிகளை உடனடியாக நிறைவேற்ற தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.


Star Tamil News      |    Glacier Burst

Leave a Reply

%d bloggers like this: