[ Fukushima ] அணு கழிவு நீரை கடலில் கலந்து விடும் ஜப்பான் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு !!-01

[ fukushima ]

அணு கழிவு நீரை கடலில் திறந்து விடும் ஜப்பான் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு


ஜப்பானின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணு கழிவு நீரை கடலில் திறந்து விட முடிவு செய்துள்ள ஜப்பான் அரசின் திட்டத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணு உலை கடுமையாக பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து அணு உலை செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு அணு உலையில் பயன்படுத்தி வந்த ஒரு மில்லியன் டன் அளவிலான கழிவுநீரை பாதுகாப்பாக 1000க்கும் மேற்பட்ட தொட்டிகளில் சேகரித்து பராமரித்து வருகிறது.

இந்த அணு கழிவு நீரை சுத்திகரித்து வரும் ஜப்பான் அரசு இந்த நீரை கடலில் திறந்துவிட சர்வதேச அணுசக்தி முகமையிடம் அனுமதி கோரியிருந்தது . சர்வதேச அணுசக்தி முகமை தற்போது அனுமதி வழங்கியுள்ள நிலையில் அணு கழிவு நீரை 2022ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து கடலில் திறந்துவிட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் அந்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில் பேசியபோது இந்த அணு கழிவு நீரை திறந்து விட வேண்டியது அவசியமான ஒன்று எனவும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னரே கழிவு நீரை வெளியேற்றும் பணி தொடங்கப்படும் எனவும் இது நீண்ட கால பணி இந்த பணியை நிறைவு செய்தால் மட்டுமே புகுஷிமா அணு உலையை முற்றிலுமாக செயல் இழக்க செய்ய முடியும் என தெரிவித்தார்.

Fukushima

ஜப்பான் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நீரை கடலில் கலந்து விடுவதால் கடல்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் மேலும் மனித மரபிலேயே மாற்றம் உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால் ஜப்பான் அரசின் இந்த முடிவிற்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News                                   fukushima

Leave a Reply

%d bloggers like this: