[ Free Bus Travel ] நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் – முதல்வர் ஸ்டாலின் !! -01

[ Free Bus Travel ]

நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் – முதல்வர் ஸ்டாலின்


தமிழகம் முழுவதிலும் உள்ள நகர அரசு பேருந்துகளில் நாளைய தினம் முதல் பெண்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக இன்றைய தினம் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அவருடன் 34 அமைச்சர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட ஸ்டாலினுக்கு பல தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என பல எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.

இந்நிலையில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறிய பல வாக்குறுதிகளை பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டார்.

Free-bus-travel

Also Readமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!

அதன்படி தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறும் மக்களின் சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும். ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும். இதில் முதல் தவணையாக ரூபாய் 2000 இம்மாதம் வழங்கப்படும். பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற புதிய துறை உருவாக்கப்படும்.

மே 16ம் தேதி முதல் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு . தமிழகத்தில் அனைத்து பெண்களும் நாளைய தினத்திலிருந்து சாதாராண கட்டண நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மொத்தம் 5 திட்டங்களுக்கு இன்று மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதில் பெண்கள் இலவசமாக நகர பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்கிற திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பயண அட்டை இல்லாமலும் நாளைய தினம் முதல் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசின் இந்த சலுகை அறிவிப்புகளால் போக்குவரத்து துறைக்கு ஏற்படும் கூடுதல் செலவு தொகையான 1200 கோடி ரூபாயை அரசு மானியமாக செலுத்தி ஈடுசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!

Star Tamil News  | Free Bus Travel 

Leave a Reply

%d bloggers like this: