[ Forbes billionaires ] உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ம் இடம் 

[ Forbes Billionaires ]

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3ம் இடம்


நியூயார்க் நகரில் 1917ம் ஆண்டு தொடங்கப்பட்ட போர்ப்ஸ் பத்திரிகை கடந்த 35 ஆண்டுகளாக உலகின் மிக பெரிய செல்வந்தர்கள், சிறந்த நிறுவனங்கள் மற்றும் சிறந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது இப்பட்டியலில் இடம் பெறுவது என்பது உலக அளவில் சிறந்த கௌரவமாக கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ( இந்திய மதிப்பில் ) சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக ( இந்திய மதிப்பில் ) சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பிரபல ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

forbes-billionaires

ஆசிய அளவிலான மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் சுமார் 3 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கௌதம் அதானி இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மேலும் இப்பட்டியலில் ஷிவ் நாடார் ராதாகிஷண் தமானி, உதய் கோட்டக், இலட்சுமி மிட்டல், போன்ற பல கோடீஸ்வரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் 724 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலாவது இடத்தை வகித்து வருகிறது அதற்கு அடுத்தபடியாக 698 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாம் இடத்திலும், 140 கோடி கோடீஸ்வரர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது .


Star Tamil News                                 Forbes Billionaires

Leave a Reply

%d bloggers like this: