உங்க Mobile தொலைந்தால் 1நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம் அல்லது லாக் செய்யலாம்

உங்க Mobile தொலைந்தால் 1நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம் அல்லது லாக் செய்யலாம் உங்க gmail Account இருந்தால் மட்டும போதுமானது.

Star Tamil News


உங்கள் மொபைல் தொலைந்து விட்டதா அல்லது மறந்து எங்காவது வைத்து விட்டீர்களா பதற்றமடைய வேண்டாம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எளிதாக கண்டுபிடித்து விடலாம் உங்கள் Personal Data  அல்லது முக்கிய தகவல்களை யாராவது திருடி விடுவார்களோ என பயம் கொள்ள  தேவையில்லை. உங்கள் மொபைல் திருடப்பட்டுள்ளது என நீங்கள் நினைத்தால் இருந்த இடத்திலிருந்து உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை இந்த வழிமுறையின் மூலம் அழித்துவிட முடியும் அந்த வழிமுறை பற்றி கீழே காண்க .

 

Find my device மூலம் இதை எளிதாக செய்ய முடியும் . ஏற்கனவே உங்கள் mobileலில் பதியபட்டிருக்கும் Gmail ஐடி மூலம் Login செய்து Google serchஐ Open செய்து கொள்ளுங்கள் பின்பு android.com/find என்ன டைப் செய்து அந்த பக்கத்திற்கு சொல்லுங்கள் அப்போது ஸ்கிரீன் இன் இடதுபுறம் நாம் தவறவிட்ட மொபைல் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே Play Sound , Lock , erase என மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.

Mobile

இப்போது உங்கள் மொபைல் அருகில் தான் எங்காவது இருக்கும் என்று நீங்கள் எண்ணினால் Play Sound எனும் பட்டனை Click செய்து  உங்கள் மொபைலில் ஒலியை எழுப்ப செய்யலாம்.

உங்கள் மொபைல் திருடப்பட்டு விட்டது என நீங்கள் உணர்ந்தால் அதில் உள்ள Lock ஆப்ஷனை பயன்படுத்தி யாரும் பயன்படுத்த முடியாத வகையில் உங்கள Mobileஐ  Lock செய்துவிடலாம் அல்லது உங்கள் மொபைலில் உள்ள தகவல்கள் திருடு போய்விடக்கூடாது என நீங்கள் எண்ணினால் erase  பட்டனை அழுத்தி மொபைலில்  உங்கள் தகவல்களை முற்றிலும் அழித்து விடலாம் மேலும்  ஸ்கிரீனின் வலதுபுறத்தில் உங்கள் மொபைல் எந்த இடத்தில் உள்ளது என Map மூலம் அறிந்து கொள்ளலாம்.


Star Tamil News

Leave a Reply

%d bloggers like this: