08-நாளை இறுதி டெஸ்ட் : சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய அணி ?

நாளை இறுதி டெஸ்ட் : சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய அணி!!! 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி  4 டெஸ்ட் , 5 t20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது நடந்த போட்டி பகல் இரவு போட்டியாக நடைபெற்றது ஆனால் நாளை நடைபெற உள்ள போட்டி வழக்கம்போல பகல் போட்டியாகவே நடைபெறும்

நாளைய போட்டியில் இந்திய அணியில் முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது பும்ரா தொடரில் இருந்து விலகி உள்ளதால் மேற்கூறிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் சுழற்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அக்ஷர் பட்டேல் அஸ்வின் கூட்டணி சிறப்பாக செயல்படுவதால் அதில் மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு.

நாளைய  காலை 9:30க்கு தொடங்க உள்ள இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சம் டிரா செய்தாலே டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோத வாய்ப்பு கிடைக்கும்.

மைதானம் குறித்த சர்ச்சை

இதற்கிடையே அகமதாபாத் மைதானம் குறித்த கடும் சர்ச்சை நிலவி வருகிறது. கடந்த போட்டி இரண்டு நாட்களில் முடிவடைந்ததால்  இந்த மைதானம் டெஸ்ட் போட்டிகளுக்கு உகந்ததல்ல என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் inzamam-ul-haq பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் போன்றோர் அடுக்கடுக்கான விமர்சனம் வைத்துள்ளனர்.

விராட் கோலி பதிலடி

டெஸ்ட்

டெஸ்ட்

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்ட கருத்தில் தாங்கள் அணியின் வெற்றிக்காக மட்டுமே விளையாடுவோம் என்றும் 5 நாள் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவதில்லை என்றும் விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

Leave a Reply

%d bloggers like this: