4வது டெஸ்ட் கிரிக்கெட் – இங்கிலாந்து திணறல் ஆட்டம்

4வது டெஸ்ட் கிரிக்கெட்-இங்கிலாந்து திணறல் ஆட்டம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

டெஸ்ட்-கிரிக்கெட்

இங்கிலாந்து அணி

இன்றைய போட்டியில் இந்திய அணி  3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன்  களமிறங்கியது  போட்டியின் ஆரம்பத்தில் இருந்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் தற்போது வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து அவுட்டானார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

 

Leave a Reply

%d bloggers like this: