Facebook -ல் பணம் சம்பாதிக்கும் விதிமுறைகளை எளிதாகியுள்ளது !!-14

 Facebook -ல் பணம் சம்பாதிக்கும் விதிமுறை எளிதாக்கியுள்ளது

உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்  கடந்த வியாழக்கிழமை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி Facebook பயனாளர்கள் தங்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோ களுக்கான monetization விதி முறையை மாற்றி அமைத்துள்ளது.

பேஸ்புக் இதுவரை மூன்று நிமிடங்களுக்கு மேல் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களுக்கு மட்டுமே monetization approval அளித்துவந்த விதிமுறைகளை  மாற்றி இனி குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வீடியோக்களுக்கும் monetization அப்ரூவல் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விளம்பர வருவாய்

Facebook

பயனாளர்கள் பதிவேற்றம் செய்யும் ஒரு நிமிட வீடியோக்களுக்கு இடையே 30 விநாடிகள் விளம்பரங்களை பேஸ்புக் நிறுவனம் சேர்க்கும் மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிமிடங்களுடைய வீடியோக்களுக்கு இடையே 45 வினாடிகள் ஓடும் விளம்பரங்களை நிறுவனம் இனைக்கும் இதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் ஒரு பகுதி பேஸ்புக் நிறுவனத்திற்கும் மற்றொரு பகுதியை வீடியோவை பதிவேற்றம் செய்யும் பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் படி இந்த புதிய முறையின் சோதனை ஓட்டம் அடுத்த சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளதாக பேஸ்புக் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது சோதனை முயற்சிகள் முடிந்ததும் அனைத்து பயனாளர்களும் இந்த முறையை பயன்படுத்த முடியுமென தெரிவித்துள்ளது.

Leave a Reply

%d bloggers like this: