[ Face Mask ] 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை – அமெரிக்கா !!

[ Face Mask ]

2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை – அமெரிக்கா


கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உள்ள ஒரே வழியான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகளில் உலகின் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 46% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவனை செலுத்தப்பட்டுள்ளது. அதாவது சுமார் 15.40 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11.70 கோடி பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு தவனைகளும் செலுத்தப்பட்டு விட்டது.

Face-mask

இதற்கிடையில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதில் முதன்மையாக கருத்தப்படும் மாஸ்க் அணிவது அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்கிற உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளயும் செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய ( Face Mask ) வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் இன்று அறிவித்துள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது.

ஆனாலும் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்டவர்கள் மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், இரண்டு தவணைகளையும் முழுமையாக செலுத்திக்கொள்ளாதவர்கள், ஒரு தவணையை மட்டும் செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையையும் செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடையாதவர்கள் கட்டாயம் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருசில கட்டுப்பாடுகள் உள்ள போதும் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்திக்கொண்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Also Read : ஏவுகணை தாக்குதல் – மனைவி உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்த கணவர் !!


Star Tamil News   |    Face Mask 

Leave a Reply

%d bloggers like this: