[ Exit Poll ] மேற்கு வங்கம் இறுதிகட்ட வாக்குப்பதிவு – இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல் ரிசல்ட் !! -01

[ Exit Poll ]

மேற்கு வங்கம் இறுதிகட்ட வாக்குப்பதிவு – இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல் ரிசல்ட்


தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு எட்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி மேற்கு வங்கத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி இன்று நடைபெற்று வரும் இறுதி கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் திருவிழா நிறைவுபெறுகிறது.

Exit-poll

அதன்படி இன்று 35 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தா வடக்கு, மால்டா பாகம், முர்ஷிதாபாத், பிர்பும் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் 283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடியதாக கருதப்படும் இந்த இறுதி கட்ட தேர்தல் 11,860 வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:30 மணியுடன் நிறைவடைகிறது.

எக்ஸிட் போல் ரிசல்ட்

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு பெறுவதால் இன்று மாலை 7:30 மணிக்கு எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக உள்ளன. முந்தைய தேர்தல்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் 70% சரியாக இருந்துள்ளது என்பதால் இன்று மாலை வெளிவரவுள்ள கருத்துக்கணிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News    |     Exit Poll 

Leave a Reply

%d bloggers like this: