[ Exit Poll ] கருத்து கணிப்புகள் அனைத்தும் தவறானது புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி !! -03

[ Exit Poll ]

கருத்து கணிப்புகள் அனைத்தும் தவறானது புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி


தமிழ்நாடு புதுச்சேரி உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை மே 2 ஆம் தேதி வெளியாக உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 29ஆம் தேதி வெளியாகியிருந்தன.

இந்நிலையில் புதுவை முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் ​​தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நம்பமுடியாதவையாகவும் தவறானதாகும் உள்ளன என்று கூறினார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாராயணசாமி கடந்த காலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் முற்றிலும் பொய்யான கணிப்புகளாகவே இருந்துள்ளன என தெரிவித்தார்.

புதுவையை பொருத்தவரையில் 2016ல் வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்று தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்தது. 30,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள தொகுதிகளில் வெறும் 200, 300 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது என நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டின் தேர்தலுக்கு பின்னர் கருத்துக்கணிப்புகளை நடத்தியவர்கள் வீட்டுக்குள்ளே இருந்தபடியே கருத்து கணிப்புகளை நடத்தியது வேடிக்கை எனவும். ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின்போது புதுவை மக்கள் தனக்கு அதிக அளவிலான ஆதரவை காட்டியதை தன்னால் உணர முடிந்தது எனவும் அதனால் மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணியே இந்தமுறையும் பெரிய அளவிலான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். அதைப்போல தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்பார்.

Exit-poll

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இங்கு வெற்றி பெற்றால் புதுவை பாதுகாப்பாக இருக்காது எனவும் பாஜக விரித்திருக்கும் சதி வலையில் விழுந்து விட வேண்டாம் என புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளிடம் நான் கோரிக்கை விடுக்கிறேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

[ மொத்த இடங்கள் – 30 ]

Zee News Exit Poll : பாஜக + – 19, காங் + – 10, மற்றவை – 1

Republic & CNX : பாஜக + – 16-20, காங் + – 11-13, மற்றவை – 0

ABP News & C Voter : பாஜக +: 19-23, காங் + – 6-10, மற்றவை: 1-2


Star Tamil News  |  Exit Poll 

Leave a Reply

%d bloggers like this: