[ EVKS Elangovan ] தமிழ்நாடு காங் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா நோய் தொற்று !!- 02

[ EVKS Elangovan ]

தமிழ்நாடு காங் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா நோய் தொற்று


இந்தியா முழுவதும் covid-19 நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் மூன்று லட்சத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் நேற்றைய தினம் புதிதாக 12652 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள், அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Evks-elangovan

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Star Tamil News    |   EVKS Elangovan

Leave a Reply

%d bloggers like this: