[ EPS ] தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி !! – 05

[ EPS ]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி


தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

EPS-எடப்பாடி

தமிழகத்தில் covid-19 நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் தமிழக முதல்வர் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருக்கு கொரோனா நோய்தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று வதந்திகள் பரவின .

இதைத்தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி தமிழக முதல்வர் கடந்த சில நாட்களாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Star Tamil News     | EPS admitted in hospital

Leave a Reply

%d bloggers like this: