[ Eng vs Ind ] 4வது டி20 போட்டி இந்திய அணி திரில் வெற்றி !!

[ Eng vs Ind ] 4வது டி20 இந்திய அணி திரில் வெற்றி

Star Tamil News                               Eng Vs Ind


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி  குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது இதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர்.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி போன்றோர் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் , ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியது.

Eng-Vs-Ind

ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி  8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்களும், ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 30 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 37 ரன்களும் எடுத்திருந்தனர் இங்கிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஆர்ச்சர்  4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 186 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது இங்கிலாந்து அணி அந்த அணியின் துவக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பட்லர் களமிறங்கினர் கடந்த போட்டியில் 88 ரன்கள் விளாசிய பட்லர் இந்த போட்டியில் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் விக்கெட் இழந்தார் மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தாக்கூர் பந்துவீசில் சூரியகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற  இந்திய அணியின் வெற்றி பிரகாசமானது .

இங்கிலாந்து அணி ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது இதைத் தொடர்ந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-2 என சமன் செய்தது.

இத்தொடரின் இறுதி ஆட்டம் நாளை மார்ச் 20ஆம் தேதி நடைபெற உள்ளது இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News                              Eng Vs Ind

Leave a Reply

%d bloggers like this: