[ Victory Celebration ] மே 2ம் தேதி வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை – தேர்தல் ஆணையம் !!

[ Victory Celebration ]

மே 2ம் தேதி வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை – தேர்தல் ஆணையம்


தமிழகம் புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கட்சிகள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த நோய் பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Election-victroy-celebration

அதன்படி மே 2-ஆம் தேதி 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் முன்னணி நிலவரங்கள் மற்றும் வெற்றி முடிவுகள் வெளியிடப்படும் போது அதனை கொண்டாட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Star Tamil News   |   Election Victory Celebration

Leave a Reply

%d bloggers like this: