இன்று மாலை 4.30-மணிக்கு ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

இன்று மாலை 4.30-மணிக்கு ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

டெல்லி:-

இன்று மாலை 4.30 மனிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 ஐந்து மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, அசாம்,மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் வரும் மே மாதத்துடன் சட்டமன்றத்தின் பதவிகாலம் முடிவடைகிறது எனவே இம்மாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது .

Election-commission

கடந்த மாதம்  தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் குழு இம்மாநிலங்களுக்கு நேரில் சென்று  மாவட்ட ஆட்சியர்கள் தலைமை செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது .

இந்நிலையில் இன்று மாலை இம்மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் இம்மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

%d bloggers like this: