[ Election Commission ] ஆ.ராசா சர்ச்சை பேச்சு – இன்று மாலைக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !!-01

[ Election Commission ]

ஆ.ராசா சர்ச்சை பேச்சு – இன்று மாலைக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி குறித்து தேர்தல் பரப்புரையின் போது அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக அதிமுக தரப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து அறிக்கை பெறப்பட்டு அந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Election-Commission

இதையடுத்து இந்த விவகாரத்தில் தி.மு.க துணைப் பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இன்று மாலை 6 மணிக்குள் ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


Star Tamil News     |      Election Commission

Leave a Reply

%d bloggers like this: