[ Election Campaign ] கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டை ஆள நினைக்கலாமா ? ஸ்டாலின் குறித்து முதல்வர் விமர்சனம் !! -02

[ Election Campaign ]

கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டை ஆள நினைக்கலாமா ஸ்டாலின் குறித்து முதல்வர் விமர்சனம்

Tn Election 2021                                                    Star Tamil News

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனது சூறாவளி சுற்றுப் பயணத்தின் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை கரூர் மாவட்டத்தில் இருந்து துவங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்.

மேலும் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டை ஆள நினைக்கலாமா எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஆட்சியில் இல்லாத போதே அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளும் , மக்களும் படாத பாடு படுவார்கள். திமுக என்பது கட்டப்பஞ்சாயத்து கட்சி என்பது மக்களுக்கு தெரியும்.

தற்போது கரூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் செந்தில்பாலாஜி மு.க.ஸ்டாலின் ஐ பற்றி எந்த அளவுக்கு விமர்சனம் செய்துள்ளார் என்பது பற்றி சட்டசபை அவை குறிப்பிலேயே உள்ளது தற்போது அவர் தான் திமுகவின் வேட்பாளர் இது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினாலே போதும் மக்கள் செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வார்கள் என விமர்சித்தார்.

Election Campaign

மேலும் முன்னாள் அமைச்சர் சின்னசாாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தெரிவிக்கையில் சின்னசாமி என்னிடம் 12 வருடம் அரசியல் வாழ்க்கையை தொலைத்து விட்டேன் என வேதனைப்பட்டார் நான் அவரிடம் முன்பே அண்ணே திமுகவில் இருக்காதீங்க அங்கே உங்களுக்கு உரிய மரியாதையும் கிடைக்காது உங்கள் உழைப்பிற்கு ஏற்ற இடமும் கிடைக்காது திமுக என்பது குடும்ப கட்சி என கூறினேன்.

தற்போது முன்னாள் அமைச்சர் சின்னசாமி அதிமுகவில் இணைந்து கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் பலத்தை அதிகரித்துள்ளது என முதல்வர் தெரிவித்தார் .


Star Tamil News                Election Campaign

Leave a Reply

%d bloggers like this: