[ Durai Murugan ] திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !! -01

[ Durai Murugan ]

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு


திமுகவின் பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகன் covid-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக தற்போது மருத்துவமனை சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த மாதம் covid-19 காண தடுப்பூசியை செலுத்தி கொண்டார் இருந்த போதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து வீட்டில் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்றைய தினம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

துரைமுருகனின் உடல்நிலை குறித்து தற்போது ரேலா மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் துரைமுருகனின் உடல்நிலையை மருத்துவர் குழு தீவிரமாக கண்காணித்து தரமான சிகிச்சை வழங்கி வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Durai-murugan


Star Tamil News                      Durai Murugan

Leave a Reply

%d bloggers like this: