[ Drug Smuggler ] சர்வதேச போதை பொருள் கடத்தல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு !!- 01

[ Drug Smuggler Extradited ]

சர்வதேச போதை பொருள் கடத்தல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு


இந்தியா இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இந்தியாவை சேர்ந்த கிசான் சிங் என்ற நபரை இந்தியாவிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து குடியுரிமை பெற்ற கிஷான் சிங் என்ற நபர் கடந்த 2015-2016ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவிற்கு போதைப் பொருள் விநியோகம் செய்ததாக இந்திய அரசு சார்பாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Drug-smuggler

இந்த வழக்கில் கடந்த ஆண்டு கிஷான் சிங்கை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கிசான் சிங்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது இதை அடுத்து நேற்றைய தினம் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்ட கிசான் சிங்கை இந்திய அதிகாரிகளிடம் இங்கிலாந்து போலீசார் ஒப்படைத்தனர்.


Star Tamil News    |

Drug Smuggler

Leave a Reply

%d bloggers like this: