[ DRDO ] தண்ணீரில் கலந்து குடிக்கும் புதிய கொரோனா மருந்து – மத்திய அரசு ஒப்புதல் !! -01

[ DRDO ]

தண்ணீரில் கலந்து குடிக்கும் புதிய கொரோனா மருந்து மத்திய அரசு ஒப்புதல்


மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவிலான கொரோனா நோயாளிகளுக்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.

அவசரகால பயன்பாட்டுக்கான அடிப்படையில் இந்த மருந்துக்கு மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இது கொரோனா நோய் தொற்று சிகிச்சையில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

கொரோனா நோய் தொற்று 2வது அலை இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. சர்வ சாதாரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4187 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடும் ஆயுதமாக தடுப்பூசிகள் கருதப்படுகிறது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதவிர கொரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் ரெம்டெசிவிர் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தபட்டு வருகிறது. அதனால் அம்மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

DRDO

Also Read : கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை காப்பாற்ற சென்ற கணவரும் பலி !!

 

இந்த சூழலில் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ( DRDO ) கொரோனாவுக்கு எதிராக செயல்படும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவிலானது இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இந்த மருந்தை ஹைதராபாத் ( DRDO ) அமைப்பு பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்துக்கு 2-Deoxy-D-Glucose ( 2-DG ) என பெயரிடப்பட்டுள்ளது.

இம்மருந்தை கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இரண்டாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இம்மருந்து மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் மருந்தை உட்கொண்ட நோயாளிகள் நோய் தொற்றிலிருந்து மிக விரைவாக குணமடைந்தனர் அதன் பின்னர் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் எனவும் வந்துள்ளது.

மேலும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் தற்போது நாடு முழுவதிலும் உள்ள 6 மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. கூடுதல் சிறப்பாக இந்த மருந்து நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாக குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவசர பயன்பாட்டுக்காக தற்போது இந்த மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இம்மருந்து சந்தைக்கு வரும் பட்சத்தில் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாறும் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

Also Read : கொரோனா பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறல் !!


Star Tamil News   |  DRDO

Leave a Reply

%d bloggers like this: