[ Dmk Vs Admk ] அண்ணன் திமுக வேட்பாளர் தம்பி அதிமுக வேட்பாளர்- 13

[ Dmk Vs Admk ] அண்ணன் திமுக வேட்பாளர் தம்பி அதிமுக வேட்பாளர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன பிரதான கட்சிகளான அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் தீவிர பரப்புரையில் ஈடுபடு தொடங்கியுள்ளன.

அவ்வாறு வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் சில சுவாரசியமான விஷயங்களும் அரங்கேறியுள்ளன சென்னையில் திமுக தலைவர் “ஸ்டாலின் மற்றும் உதயநிதி” தந்தை மகன் போட்டியிடுவது போல திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் ஆண்டிப்பட்டி தொகுதியில் அண்ணன் திமுக வேட்பாளராகவும் தம்பி அதிமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .

விஐபி தொகுதி

எம்ஜிஆர் காலம்தொட்டு விஐபி தொகுதியாக கருதப்படும் ஆண்டிப்பட்டி தொகுதி பொதுவாக அரசியல் களத்தில் உற்று நோக்கப்படும் தொகுதியாகவே இருந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்ற தேர்தலிலும் ஆண்டிப்பட்டி தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது அதற்கு முக்கிய காரணம் தற்போதைய எம்எல்ஏ மகாராஜன் மற்றும் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் என்பவர்கள் தான்  இருவரும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் .

Dmk-Vs-Admk

Dmk-Vs-Admk

Dmk Vs Admk

 திமுக சார்பாக ஆண்டிபட்டி வேட்பாளராக போட்டியிடும் அண்ணன் மகாராஜன் கடந்த 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அந்த இடைத்தேர்தலிலும் அவருக்கு எதிராக அவரது சொந்த தம்பியான லோகி ராஜன் அதிமுக சார்பாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dmk vs Admk Tn  Election 2021

Leave a Reply

%d bloggers like this: