01-கவனமாக காய் நகர்த்தும் ஸ்டாலின்- இது தான் காரணமாம்!!! 

கவனமாக காய் நகர்த்தும் ஸ்டாலின்- இது தான் காரணமாம்!!! 

ஏப்ரல் 6-இல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் உச்ச கட்ட  பரபரப்பை எட்டியுள்ளது பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இரண்டு அணிகளிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகவே நீடிக்கின்றது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இரண்டு பிரதான கட்சிகளும் அதிக இடங்களில் தங்கள் கட்சி போட்டியிட வேண்டும் என தீர்மானமாக எண்ணுவதே இதற்கு காரணம்.

அதிமுக தரப்பில் தங்கள் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டால் தான் தேர்தல் முடிவு எவ்வாறு இருப்பினும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலத்திற்கு கைகொடுக்கும் என கணக்கு போடுகிறது  .

ஸ்டாலின் கணக்கு

ஆனால் திமுக தரப்பு சற்று வித்தியாசமாக இந்த எண்ணிக்கை விவகாரங்களை பார்க்கிறது அதற்கு முக்கிய காரணம் அமித்ஷாவின் திருவிளையாடல் தான் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் எப்படியும் தாங்கள் ஆட்சிக்கு வருவது உறுதி என தீர்மானமாக நம்புகின்றனர் ஆனால் அவர்களின் கவலை பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட 30 தொகுதிகள் அதிகமாக வெற்றி பெற வேண்டும் என்பது தான்.

ஸ்டாலின்

அமித்சா

அதிக இடங்களில்  வெற்றி பெற்றால் தான் ஆட்சியை ஐந்து ஆண்டுகள் நிம்மதியாக கடத்த முடியும் பொதுவாக அமித்ஷா இரண்டு யுக்திகளை கையாள்வார் ஒன்று தேர்தலுக்கு முந்தைய யுக்தி மற்றொன்று தேர்தலுக்கு பிந்தைய யுத்தி தேர்தலுக்கு பிந்தைய கணக்கு என்பது ஆளும் கட்சியின் எம்எல்ஏகளை வளைப்பது போன்ற  விசயத்தில் அமித்ஷா கைதேர்ந்தவர் பல மாநிலங்களில் தன் கைவரிசையை காட்டியுள்ளார் .

ஸ்டாலின்

திமுக கூட்டணி

இதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் தேர்வு கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது போன்ற அனைத்து விஷயத்தையும் மிகவும் கவனமுடன் அணுகுகிறார் சுமார் 150 தொகுதிகள் வரை திமுக வெற்றி பெற்றே ஆக  வேண்டும் என  கருதுகிறார் இன்னும் ஓரிரு தினங்களில் திமுக அணியின் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

%d bloggers like this: