[ BJP ]பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ!!-14

பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ

Tamilnadu Bjp

தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கட்சி தாவும்  நிகழ்வுகளும் நடந்து வருகின்றன அண்மையில் அதிமுகவின் சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால்  டிடிவி தினகரனை சந்தித்து  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்தார்.

Bjp

இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நரிமேடு பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் சரவணன் மதிமுகவில் மக்கள் நல கூட்டணி சார்பாக 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பின்னர் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு 2021 சட்டசபை  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து பாஜக மாநிலத் தலைவர் எல் முருகனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

Bjp Tn  election 2021

Leave a Reply

%d bloggers like this: