மதிமுக.,வுக்கு 7 – விசிக.,வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டம்? கட்சியினர் அதிருப்தி!!

மதிமுக.,வுக்கு 7 – விசிக.,வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டம்? கட்சியினர் அதிருப்தி!!

சென்னை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது இதனால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர் முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு நேற்றைய தினம் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது இதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கையெழுத்தானது பாஜகவுடன் இன்று இரவு தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆளும்கட்சியின் இந்த வேகம் திமுகவிற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே தங்கள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை

Dmk-mdmk-vck-allaince

இந்நிலையில் நாளைய தினம் மதிமுக மற்றும் விசிக போன்ற கட்சிகளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளது இதுகுறித்து மதிமுக விசிக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில் மதிமுகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என ரகசிய பேச்சுவார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் மதிமுக தரப்பிலோ 12 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகவும் இதனால் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் தெரிகிறது இதேபோல விசிகவும் 10 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் திமுக தரப்பில் 5 அல்லது ஆறு தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிமுகவின் நிலை

இதனால் இந்த இரண்டு கட்சியின் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர் மதிமுகவை பொருத்தவரையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு தற்போது உடல்நிலை முன்பை போல் இல்லை எனவும் அதனால் வைகோவின் மகன் துரை வையாபுரி தான் கட்சியின் செயல்பாடுகளைக் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது கட்சியினர் துரை வையாபுரியை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் இதுகுறித்து வைகோவிடம் பேசியதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமலுடன் கூட்டணி

விசிகவை பொருத்தவரையில் ஐந்து தொகுதிகளை ஏற்க வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக கமலின் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனராம்.

இந்நிலையில் டிகேஎஸ் இளங்கோவன் தலைமையிலான திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் இவ்விரு கட்சிகளும் ஆலோசனை நடத்த உள்ளனர் ஓரிரு தினங்களில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

%d bloggers like this: