மதிமுகவின் கடைசித் தேர்தலா 2021? திமுக + மதிமுக இனைப்பு ? 

மதிமுகவின் கடைசித் தேர்தலா 2021? திமுக + மதிமுக இனைப்பு ?  !!! 

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த  வைகோ தான் சட்டக்கல்லூரியில்  படிக்கும் காலத்தில் திராவிட சித்தாந்தத்தின் மீதான ஈர்ப்பால்  தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் தனது பேச்சு திறமை மற்றும் செயல்பாடுகளால்  திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கவனத்தை ஈர்த்து அவரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வந்தார் திமுக சார்பாக மூன்று முறை  மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானவர் 80களில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 80% பேர் வைகோவின் பரிந்துரையின் பெயரில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றவர்கள் அந்தளவுக்கு திமுகவில் செல்வாக்கு பெற்று திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தீவிரமாகச் செயல்பட்டது போன்ற காரணங்களால் வைகோ கருணாநிதி இருவரிடமும் உரசல்கள் ஏற்படத் தொடங்கின இது ஒரு கட்டத்தில் வைகோவை கட்சியில் இருந்து நீக்கும் அளவு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது இதன் பின்னர் 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார்.

தீவிர திமுக எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த வைகோ 2016 ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் தனது போக்கை மாற்றிக் கொண்டு திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தேர்தலை எதிர்கொண்டார் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து எதிர்கொள்ள இருக்கிறார்.

மதிமுக

சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட ஒரு செய்தியில் தேர்தலுக்கு பின் தான் ஒரு முக்கிய முடிவை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார் அது குறித்து தான் தற்போது மதிமுக தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வைகோவின் உடல்நிலை

இதுகுறித்து மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு முன்பைப் போல உடல்நிலை ஒத்துழைக்கவில்லை இதய கோளாறு காரணமாக மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை ஓய்வு எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர் ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வைகோ சில மாதங்களாக தனது உடல் நிலையின் தன்மையை உணர தொடங்கினார் இதனால் முக்கியமான நிகழ்ச்சிகள் தவிர பயணங்கள் பொதுக்கூட்டம் போன்ற எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார் அனேகமாக தேர்தலுக்குப்பின் மதிமுகவை தாய் கழகமான திமுகவில் இணைத்துவிட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணத்திற்கு வைகோ அவர்கள் வந்து விட்டதாகவே மதிமுக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்

 

Leave a Reply

%d bloggers like this: