மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது-09

மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இதன்படி இதுவரை முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் , மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் , விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் , ஒதுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

மதிமுகவிற்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என  தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது மதிமுகவிற்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதிமுக

Dmk Mdmk Alliance

இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வருகை தந்தார் அங்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் மற்றும் வைகோ இணைந்து தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

%d bloggers like this: