[ DMDK ] டெபாசிட் இழந்த பிரேமலதா – விரக்தியின் உச்சத்தில் தேமுதிக தொண்டர்கள் !! -03

[ DMDK ]

டெபாசிட் இழந்த பிரேமலதா – விரக்தியின் உச்சத்தில் தேமுதிக தொண்டர்கள்


2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்கு பதிவுக்கு சில வாரங்களுக்கு முன்பாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

இந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் கார்த்திகேயன், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நேற்றைய தினம் காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3வது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாமக 2வது இடம் பிடித்தது.

விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் மொத்தம் 1,94723 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. பதிவான ஓட்டுகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டு பெற்றாலே டெபாசிட் பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதன்படி பிரேமலதா 32,788 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் அங்கு டெபாசிட் இழந்தார்.

Dmdk

2021 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தேமுதிக தொண்டர்கள் இடையே கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் தேமுதிக தொண்டர் என கெத்தாக வலம் வந்த நமக்கு இந்த நிலையா பேசாமல் அதிமுக கொடுக்க முன்வந்த தொகுதிகளை பெற்றுக்கொண்டு போட்டியிட்டிருந்தால் ஒரு சில இடங்களில் ஆவது வெற்றி பெற்றிருப்போம் என அக்கட்சியின் தொண்டர்கள் தங்களின் ஆதங்கங்களை சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் வெளிப்படுத்தி வருகின்றனர் .


Star Tamil News    |      DMDK 

Leave a Reply

%d bloggers like this: