[ Director Shankar ] இயக்குனர் சங்கர் படங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!- 03

[ Director Shankar ]

இயக்குனர் சங்கர் படங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Indian 2


லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே பல தடைகளை சந்தித்து வருகிறது இந்தியன் 2 திரைப்படம்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது அந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை நிறைவு செய்யும்வரை மற்ற படங்களை இயக்க தடை விதிக்க கோரியுள்ளது.

மேலும் இப்படத்தின் பட்ஜெட் 150 கோடி ரூபாய் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது 230 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாகவும் இயக்குனர் சங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி அதில் 14 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளதாகவும் மீத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவும் தயாராக உள்ளதாகவும். படத்தின் 20 சதவீத வேலைகள் மீதம் இருப்பதால் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Director-shankar

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது இயக்குனர் ஷங்கரிடம் விளக்கம் கேட்காமல் அவர் படங்கள் இயக்க தடை விதிக்க முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் இதுகுறித்து ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் ஷங்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Star Tamil News                           Director Shankar

Leave a Reply

%d bloggers like this: