[ Dindigul ] புதையல் ஆசைகாட்டி 22 லட்ச ரூபாய் மோசடி செய்த ஜோதிடர் கைது

[ Dindigul ]

புதையல் ஆசைகாட்டி 22 லட்ச ரூபாய் மோசடி செய்த ஜோதிடர் கைது


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விவசாயி ஒருவரிடம் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி 22 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 45 சவரன் நகைகளை மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அரியபுத்தம்பட்டி என்கிற கிராமத்தை சேர்ந்த விவசாயியான தங்கவேல் என்பவர் திருப்பூர் மாவட்டம் கணியூரை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது ஜோதிடர் சசிகுமார் உங்கள் விவசாய நிலத்தில் புதையல் இறுப்பதாகவும் அதற்கு சில பூஜைகள் செய்து எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜோதிடரின் சவடால் பேச்சில் மயங்கிய தங்கவேல் ஜோதிடரை தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச்சென்று பூஜைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் பூஜைக்கு செலவாகும் எனக் கூறி அடிக்கடி தங்கவேலுவிடமிருந்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி பறித்து வந்துள்ளார். இது போதாதென மறு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல தனக்கு கார் மற்றும் புல்லட் வேண்டும் என கேட்க விவசாயி தங்கவேலு அதையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இப்படியே பல முறை புதையல் எடுத்து தராமல் பூஜை செய்வதும் சர்வீஸ் சார்ஜ் வாங்குவதுமாக இருந்த ஜோதிடர் சசிகுமார் மீது ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த தங்கவேலு தன்னிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை திருப்பி தருமாறு ஜோதிடரை அணுகியுள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் வாங்கிக்கொடுத்த புல்லட் மற்றும் காரை மட்டும் திருப்பிக் கொடுத்த ஜோதிடர் பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.

Dindigul

இதையடுத்து விவசாயி தங்கவேல் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து ஜோதிடர் சசிகுமாரை நேற்றைய தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Star Tamil News           |       Dindigul Treasure scam

Leave a Reply

%d bloggers like this: