[ Delhi ] 76 ஆண்டுளில் இல்லாதளவு வெப்பநிலை பதிவு – தகிக்கும் டெல்லி !!

[ Delhi ]

76 ஆண்டுளில் இல்லாதளவு வெப்பநிலை பதிவு – தகிக்கும் டெல்லி


டெல்லியில் 76 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் இயல்பை விட மிக அதிகளவு வெப்பநிலையும் அனல் காற்றும் வீசியது. இதனால் சாலைகளில் உள்ள தார் உருகி காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே டெல்லியில் வெயில் கொளுத்தி வருவதால் டெல்லிவாசிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Delhi

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் குல்தீப் வெளியிட்ட அறிவிப்பில் டெல்லியில் அதிகபட்சமாக 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் கடந்த 1945ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி 40.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது தான் மார்ச் மாதத்தின் டெல்லியின் அதிகபட்ச வெப்ப நிலையாக உள்ளது அதன்பின் கடந்த 76 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் டெல்லியில் இவ்வளவு அதிகமான வெயில் பதிவானது இல்லை எனவும் இதுவே முதல்முறை எனவும் இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தாவா தெரிவித்துள்ளார்.


Star Tamil News                                     Delhi

Leave a Reply

%d bloggers like this: