[ Tasmac ] மது பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு – கவனிக்காமல் அதை அருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி !!-01

[ Tasmac ]

மது பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு கவனிக்காமல் அதை அருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பை கவனிக்காமல் அந்த மதுவை குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி.

அரியலூர் மாவட்டம் அருகே சுந்தரமல்லி என்னும் கிராமத்தை சேர்ந்த விவசாயியான சோமசுந்தரம் என்பவர் மகன் சுரேஷ் நேற்று மதியம் அவர் வழக்கமாக செல்லும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் இருந்து மது வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். பின்னர் வாங்கி வந்த மதுவை வீட்டில் வைத்து அருந்த தொடங்கியுள்ளார். பாதி அளவு மதுவை குடித்தவர் தொடர்ந்து அடுத்த ரவுண்ட் குடிப்பதற்காக டம்ளரில் மதுவை ஊற்றும்போது மது பாட்டிலுக்குள் பாம்பு குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு லேசான மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது உடனடியாக இதுகுறித்து தனது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக சுரேசை ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tasmac-மது-பாட்டிலில்-இறந்த-பாம்பு

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுபாட்டிலில் பாம்பு இறந்து கிடந்தது குறித்து உடையார்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News                                        Tasmac

Leave a Reply

%d bloggers like this: