Covid death : மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கொரோனாவுக்கு பலி !! 01

[ Covid death ]

மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கொரோனாவுக்கு பலி !!


இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்த 90 வயதான லியோரி குரூஷ் என்பவர் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் தங்குவதற்கான இரட்டை குடியுரிமை பெற்றவர். இவர் லண்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா வந்து தங்கி இருந்தார்.

அதன் பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் நகருக்கு சுற்றுலா வந்த லியோரி குரூஷ் கோவளம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோரி குரூஷ்க்கு காய்ச்சல் அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

Covid-death

Also Read : ஏவுகணை தாக்குதல் – மனைவி உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்த கணவர் !!

 

இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லியோரி குரூஷ்க்கு நுரையீரலில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியதால் நேற்றைய தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது இறப்பு குறித்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்கு முறையாக தகவல் பிரிக்கப்பட்ட பின்பு அவரது உடல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை எரியூட்டும் மறைமலைநகரில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also Read : சீனாவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி !!


Star Tamil News  |   Covid Death

Leave a Reply

%d bloggers like this: