[ Covid-19 ] கொரானா பரவல் – மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை !

( Covid-19 )

” கொரானா பரவல் ” மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை


இந்தியாவில் கொரானா நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரானா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் குறைந்து வந்த கொரானா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன அந்தவகையில் நேற்றைய தினம் தமிழகத்தில் 1385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிகபட்சமாக சென்னையில் 496 நபர்களுக்கு கொரானா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Covid-19

இதைத்தொடர்ந்து வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை கொரானா பரவலுக்கு மத்தியில் எதிர்கொள்வது மற்றும் கொரானா பரவலை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழுவினருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் ஆலோசனைக்கு பின் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Star Tamil News                                   Covid-19

Leave a Reply

%d bloggers like this: