[ Covid-19 Test ] வாக்கு எண்ணிக்கை – முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!

[ Covid-19 Test ]

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையை உரிய பாதுகாப்புகளுடன்
மேற்கொள்ள தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

Covid-19-test

இதையடுத்து இன்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிவிப்பில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரனோ தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் அளித்த பின்பு தான் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் முகவர்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் சராசரியாக 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஒவ்வொரு மேஜைகளிலும் தனித்தனியாக சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Star Tamil News     |      Covid-19 Test

Leave a Reply

%d bloggers like this: