[ Covid-19 ] மீண்டும் மிரட்டும் கொரானா – இரவு ஊரடங்கு அமல் !!!

[ இந்தியாவில் Covid-19 ] மீண்டும் மிரட்டுகிறது கொரானா இரவு ஊரடங்கு அமல்

இந்தியாவில் கொரானா தடம்பதித்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரானா தொற்று  எண்ணிக்கை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

பஞ்சாப் குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து அம்மாநிலங்களில் சில முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது மாநில அரசுகள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 24804 புதிய நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது 140 பேர் பலியாகியுள்ளனர் இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 16340 பெருக்கு தோற்று பரவியுள்ளது 54 பேர் பலியாகியுள்ளனர்.

Covid-19

கொரானா தொற்று வேகம் அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் கவலையடைந்துள்ளன. covid-19 இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன் ஒரு கட்டமாக இந்தியாவில் பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு அமலில் உள்ள நகரங்கள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் புனே அவுரங்காபாத் போன்ற நகரங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா லூதியானா போன்ற நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

Covid-19 Stay Home Stay Safe

Leave a Reply

%d bloggers like this: