[ Covid-19 Hospital ] மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து 13 பேர் பலி !!

[ Covid-19 Hospital ]

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து 13 பேர் பலி


இந்தியாவில் covid-19 நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாள்தோறும் 60000 புதிய பாதிப்புகள் பதிவாகி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 7.2 லட்சம் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி சுமார் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் மற்ற நோயாளிகளை மீட்டு அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றினர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Covid-19-hospital

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாசிக் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் பலியான சோகம் மறைவதற்குள் நடைபெற்ற இந்த தீ விபத்து சம்பவம் அம்மாநில மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ள.


Star Tamil News    |   Covid-19 Hospital Fire

Leave a Reply

%d bloggers like this: