[ Corona Tax ] மதுபானங்கள் மீதான கொரோனா வரியை நீக்கி உத்தரவிட்டது புதுவை அரசு !!- 04

[ Corona Tax  ]

மதுபானங்கள் மீதான கொரோனா வரியை நீக்கி உத்தரவிட்டது புதுவை அரசு

[ liquor drinking is injurious to health ]

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொழுதுபோக்கு மையங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், மதுபான கடைகள் என அனைத்தும் மூடப்பட்டது.

புதுவையில் 2 மாதம் மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் கடந்த ஆண்டு மே மாத இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் அண்டை மாநிலங்களை சேர்ந்த மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் நோய் தொற்று அதிகரிக்கக்கூடும் என அஞ்சிய புதுவை அரசு இதை தடுக்கும் விதமாக மதுபானங்கள் மீது 25 % வரி விதித்தது. இந்த வரியானது இந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

Corona-tax

           Liquor Drinking Is Injurious TO Health

இந்த வரி உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுவின் விலைக்கு இணையாக புதுச்சேரியிலும் மது விற்கபட்டது. இதனால் புதுவையில் மது விற்பனை சரிந்து அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதுவையில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு புதுவை கலால்துறை மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட 25% வரியை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வரி நீக்கபட்டு மதுபானங்கள் எம்.ஆர்.பி விலையில் இன்று முதல் விற்பனை செய்யப்படுவதால் மது பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Star Tamil News              |     Corona Tax Exemption

Leave a Reply

%d bloggers like this: