[ Relief Fund ] கொரோனா நிவாரண நிதி டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படும் – தமிழக அரசு !! 01

[ Relief Fund ]

கொரோனா நிவாரண நிதி டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படும் – தமிழக அரசு


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கொரோனா நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7ம் தேதி முதலமைச்சராக
மு.க ஸ்டாலின் பதவியேற்றதும் கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்திட்டார் .

Relief-fund

Also Read : X பிரிவு பாதுகாப்பில் மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்கள் !!

மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் தொகையில் முதல் தவணையாக இந்த மாதம் 2 ஆயிரம் ரூபாயும் அடுத்த மாதம் 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டிருந்தது. கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு நியாய விலை கடைகளில் காலை முதல் மதியம் வரை மட்டும் இந்த பணத்தை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக டோக்கன்கள் கொடுக்கப்பட்டு அதன்படி பணம் வழங்கப்பட உள்ளது. மேலும் 15 ஆம் தேதி முதல் நியாய விலை கடைகளில் கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் நியாயவிலை கடைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் நியாயவிலை கடை ஊழியர்களுக்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read : தளபதி 65 படப்பிடிப்பை நடத்த வேண்டாம் விஜய் வேண்டுகோள் !!


Star Tamil News |  Relief Fund

Leave a Reply

%d bloggers like this: